Jun 28, 2011

ஈழத் தமிழருக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருது..


ஈழத் தமிழருக்கு உயரிய விருதான செவாலியர் விருது., பிரான்ஸ் அரசு கௌரவிப்பு…..

பிரெஞ்சு அரச சேவையில் நீண்ட காலம் பணியாற்றிய இலங்கை பிரஜையை பிரான்ஸ் அரசு நேற்று கௌரவித்துள்ளது

கடந்த 2007 ஆம் ஆண்டு பிரெஞ்சு அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற யாழ் பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த நாகநாதன் வேலுப்பிள்ளை இலங்கைக்கான பிரேஞ்சு தூதுவர் திருமதி கிருஸ்டியன் ரொபின்ஸனினால் நேற்று திங்கட்கிழமை செவாலியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

ஆங்கிலம் தமிழ் பிரெஞ்சு சிங்களம் கிந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்ற இவர் பல தசாப்தங்களாக இலங்கை மற்றும் பிரெஞ்சு அரச சேவையில் கடமையாற்றியுள்ளார்.இவர் சட்டத்தரணியுமாவார்.
திரு. வேலுப்பிள்ளை பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. வே.நாகநாதன், திருமதி. ஈஸ்வரி நாகநாதன் அவர்களின் புதல்வர் ஆவார்.

காலஞ்சென்ற திரு. நாகநாதன் பருத்தித்துறை நகர சபையின் துணை முதல்வராக இருந்தவர் என்பதும், நாகர்கோவிலில் பாடசாலை ஒன்றை உருவாக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியான பேராசிரியர் ஞானக்குமரனின் சகோதரரும் ஆவார்.

செவாலியர் விருது திறமை அடிப்படையில் பிரான்ஸ் நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.





நன்றிகள் Nirujan Selvanayagam

0 comments: