Jul 13, 2011

கேள்விக்குள்ளாகும் யாழ்ப்பாணத்தின் இன்றைய கலாசாரம்

வணக்கம் நண்பர்களே இந்த முறை என் பதிவு சற்று சிறியதாகவும் ஒரு சமூக பிரச்சனை அலது சீரழிவு தொடர்பானதாக அமைகின்றது .காரணம் பரீட்சைகள் வருகின்றமையே நேரம் ஒதுக்குவதில் சிறிய சிக்கல் தான் என்றாலும் கிடைத்த நேரத்தில் இதை பதிகிறேன் சரி நாம் விடயத்துக்குள் வருவோம் . தமிழர் பாரம்பரியத்தின் தாயகமாக கூறப்பட்ட சிறப்பினையுடையது எமது யாழ் நிலம்.அனால் அது தற்க்காலத்தில் சிதைந்து போவதனை கண்முன்னே காண முடிகின்றது எனலாம்.பாரம்பரியதினதும்,ஒழுக்கத்தினது இருப்பிடமாக இருந்த எமது யாழ் தாயானவள் இன்றைய காலகட்டத்திலே ஒழுக்க குறைவிற்க்கும்,கட்டுக்கோப்பற்ற தவறான வாழ்க்கை முறைக்கும் தள்ளப்பட்டுள்ளால் எனலாம்.மேலைத்தேய மோகத்தினாலும்,தொழில்நுட்ப வளர்ச்சினாலும் மனிதன் அடைந்துவிட்ட அதீத வளர்ச்சினாலேயே இன்று இந்தநிலை எம் மண்ணிற்க்கு.மேலைத்தேசத்தவரது கலாசாரப் பரவலானது      இலங்கைத்தீவில் அதிகூடுதலாகப் பரவிவருகின்றது.இதனை இன்றைய என் நாடு சுற்றுலா பிரதேசங்களில் காணக்கூடியதாக உள்ளது.   மதிய மலைநாட்டு பிரதேசங்களில்,ஹக்கல பூங்கா,பேராதனைப் பூங்கா,காலி கடற்க்கரை முதலியனவற்றில் அதிக சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன எனலாம்.தமிழ் பாரம்பரியம் மிகவும் கட்டுக்கோப்பினையுடையதொரு தனிச்சிறப்பான பாரமப்ரியமாகும்.இந்தநிலையில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் தாரக மந்திரமாக கொள்ளப்படுகின்றது.மேலும் கணவன்-மனைவி இடையிலான தாம்பத்திய உறவானது மிகவும் புனிதமானதாக போற்றப்படுகின்ற பூமியாக உள்ளது.எனினும் மேலைத்தேய கலாசாரமானது மிகவும் நேர்மாறானதொரு போக்கினையே அன்றிலிருந்து இன்று  இன்றுவரை கைக்கொண்டுள்ளது.அந்தவகையில் அந்நாட்டவர் தாம்பத்திய உறவின் தனித்துவத்தினையும்,மகிமையையும் அறியாதவர்கள் பொது இடங்களில் எவ்வாறான நடத்தை கோலத்தை கைக்கொள்வதென்ற பாகுபாடு இல்லாதவர்கள் இதன் காரணமாக இன்று எம் நாட்டு சுற்றுலா மையங்களிலில் இவ்வாறான கோலத்தினைக்காணக்கூடியதாக உள்ளது.இந்த நிலைமையானது எம் யாழ் மண்ணிற்க்கும் இன்று ஏற்ப்பட்டுள்ளமையே மிகவும் மனவருத்தமடையச் செய்வதாகவே அமைந்துள்ளது.யாழின் சுப்பிரமணியம் பூங்காவானது இத்தகைய இழிநிலைக்கு ஆளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.மேலைத்தேய கலாசாரம் காரணமாக எம் மண்ணின் இளம் சமுதாயமும்:தமிழர் பாரம்பரியமும் தறிகெட்டுத் தளம்பும் நிலை உருவாகியுள்ளது.எனவே நண்பர்களே(யாழ் வாசிகளே)தாய் மண்ணின் கலாசாரத்தையும்,பாரம்பரியத்தையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரது  கடமையும் சேவையும் ஆக்கும் என்பதை மனத்திற் செயற்படுவோமாக.

Jul 3, 2011

சாதனை வீரன் சனத் ஜெயசூர்யா(Sanath jayasuriya)

இந்த முறை என் பதிவு என் கிரிக்கெட் ரசனை சம்பந்தப்பட்டது.அதாவது நான் இந்த முறை நான் அதிகம் விரும்பி ரசித்த ஒரு கிரிக்கெட் யாம்பவான் ஒருவரை பற்றியும், அவரிடம் நான் ரசித்தவற்றையும் பகிரப்போகிறேன் .எல்லோருக்கும் தெரியும் ஆசியநாட்டவர்கள் அதிகம் விரும்பிப்பார்க்கின்ற ஒரு விளையாட்டு கிரிக்கெட். விரும்பி என்பதை விட உயிருக்கு உயிராய் நேசித்து பார்த்து அதனை தான் விரும்பும் அணியினை அல்லது ஒரு குறப்பிட்ட வீரரை சார்ந்து கதைப்பது வழமை. அந்த வகையில் நான் என் உயிராக நேசித்து ரசிக்கும் கிரிக்கெட் அணி நம் இலங்கை  அணியை தான். சிறுவயது முதலே இலங்கை அணியினை பிடித்து விட்டது காரணம் தான் 1996 உலகக்கோப்பை.நான் அந்த பருவகாலத்தில் ஒரு சிறுவன்தான். அந்த போட்டிகள் நடைபெற்றபோது  என் தந்தை அந்த போட்டிகளை பார்ப்பது வழமை அப்படியே நானும் பார்த்து பார்த்து கிரிக்கெட் என்னும் போதைக்குள் அடிமையாகிவிட்டேன் என்றே சொல்லவேணும். தந்தையை போல பிள்ளை என்பார்கள் அது உண்மை போலும் இதில்.என் தந்தையும் ஒரு தீவிர இலங்கை அணியின் ரசிகன். அந்தவகையில் இலங்கை அணியினை நான் ரசிக்க ஆரம்பித்த காலப்பகுதியில் அதிகம் நான் ரசித்தது இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரராக இருந்த சனத் ஜெயசூர்யாவை தான் அவர் ஆடும் விதம் அதிரடியாக விளையாடும் விதம் என்பன அவரை ரசிக்கவைத்து .அதிக அப்படியாக அசத்திய சனத் கடந்த வாரம் தான் தனது சர்வதேச  கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ஓய்வும் பெற்றுக்கொண்டார். நான் அவருடைய ரசிகன் என்ற வகையில் நான் அறிந்த அவர் சாதனைகள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

                  சனத் ஜெயசூர்யா பிறந்தது மாத்தளை  மாவட்டத்தில் 1969 june 30 இல் தான். சனத் 1989 ஆண்டு முதல் 2011 ஆண்டு வரை இலங்கை கிரிக்கெட் அணியுடன் ஒப்பந்தத்தில் இருந்தார்.அதாவது சுமார் 22 வருடங்கள் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார் என்பதை விட விளையாடி பல சாதனைகளையும் வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்து இலங்கையின் பெருமையை உலகறியச்செய்தவர் என்று கூறினாலும் அது மிகையாகாது.  அந்தவகையில் சனத் 110 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மற்றும் 445 ஒரு நாள் போட்டிகளில் மற்றும் 31 சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளிலும் விளையாடியுள்ளார் இது ஒரு சாதனையாகவும் கருதப்படுகின்றது. அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபடியான போட்டிகளில் விளையாடியவர் என்பதே அதுவாகும். இவர் ஒரு இடது கை துடுப்பாட்ட வீரர் மற்றும் ஒரு இடது கை சுழல் பந்து வீச்சாளரும் ஆவார். ஆக மொத்தம் இவர் இலங்கை அணியில் இருந்த ஒரு சிறந்த சகலதுறை ஆடக்காரர். இதனை இவரது பெறுபேறுகள் நிலைநிறுத்துகின்றன அதாவது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 13000 ஓட்டங்களையும் 300 விக்கட்டுக்களையும் கைப்பற்றிய ஒரே ஒருவர் இவர் தான்.சனத் ஆரம்பகாலங்களில் அணியிலே ஒரு பந்து வீச்சாளராகவே அறிமுகமானார். அனால் 1992 காலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தன்னை ஒரு சிறந்த ஆரம்ப துடுப்பாட்டவீரராக நிலைநிறுத்திக்கொண்டார்.பின்னர் 1996 ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளில் தன் முழுத்திறமையை காட்டி அந்த ஆண்டு இலங்கை அணி உலகக்கோப்பையை கைப்பற்ற வழிகோலினார் என்றே சொல்ல வேண்டும். அந்த காலகட்டத்தில் சனத்துடன் மறுமுனையில் ஆடும் ரொமேஷ் களுவிதாரண கூட்டணி ஒரு அச்சுறுத்தலாகவே சகல அணிகளுக்கும் இருந்தனர் .ஆரம்ப துடுப்பாட்டத்துக்கு ஒரு புது இலக்கணம் கற்பித்தவர்கள் என்றே கூறலாம். அதிலும் சனத் அதிரடி என்ற ஒரு புது முறையால் பந்து வீச்சாளர்களை துவசம் செய்தார். இதனை யாரும் மறுக்க இயலாது.இவர் பெற்ற ஒரு சிறந்த பாராட்டு இவரது வாழ்க்கையில் என்னவென்றால் 1996 உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது பெற்றமையே. இதுவே1996 இலங்கை கோப்பையை வெல்வதற்க்கு இவர் மேற்க்கொண்ட  பங்களிப்பையும்  காட்டி நிற்க்கின்றது.1996 ம் ஆண்டு உலககோப்பை போட்டிகளை தொடர்ந்து அப்போதைய அணித்தலைவராக செயற்பட்டஅர்ஜுன  ரணதுங்க ஓய்வு பெற 1999 ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியின் தலைவரா சனத் நியமிக்கப்பட்டார் .அதனை தொடர்ந்து சிறந்த தலைவராகவும் செயற்ப்பட்டு அணியினை வழி நடத்திச்சென்றார். ஆனாலும் 2003 உலகக்கோப்பையில் இலங்கை அணி பெரிதாக சோபிக்க தவறியது இதற்க்கான பொறுப்பை தலைவர் என்ற முறையில் ஏற்று தனது தலைமைப்பதவியை இராஜினாம செய்துகொண்டு அணியில் ஒரு சாதாரண வீரராக செயற்ப்பட்டார். .அதனை விட அதிக அணித்தலைவர்களுக்கு கீழ் விளையாடிய ஒரு வீரர் என்ற ஒரு பெருமையும் இவரையே சாரும்.இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் ஒரு குறுகிய பார்வையில் இவர் செய்த சாதனைகளை நான் பகிர்கிறேன்.
இன்று வரை இவரிடம் உள்ள சாதனைகள் /சாதித்தவை
 1. ஒருநாள்ப்போட்டி ஒன்றில் மிக வேகமான50 ஓட்டங்களை 17 பந்துகளில் பெற்றமை 
 2. ஒருநாள்ப்போட்டி ஒன்றில் தனிநபர் பெற்ற அதிகமான ஓட்ட வரிசையில்  ஐந்தாவது இடத்தில உள்ளார். (189 ஓட்டங்கள்)
 3. ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் பெற்ற வீர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார்(28 சதம்)
 4. ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டம் பெற்ற இரண்டாவது வீரர் (13,430 ஓட்டங்கள்)
 5. ஒரு நாள் போட்டி ஒன்றில் இரண்டாவது அதிகப்படியான நான்கு ஓட்டங்களை பெற்றவர் (24 நான்கு)
 6. ஒரு நாள் போட்டி ஒன்றில் வேகமான 150 ஓட்டங்களை பெற்றவர் என்ற சாதனை(95 பந்துகள்)
 7. ஒரு நாள் போட்டிகளில் அதிகம் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது பெற்றவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில உள்ளார்(48 தடவை)
 8. 400 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முதலாவது வீரர் 
 9. தனது 39 வயதில் ஒரு சதம் பெற்று மிக அதிகவயத்தில் சதம் பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார் 
 10. அதிக தரம் 150 ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார்(4 தடவை)
 11. ஆரம்ப விக்கட்டுக்காக பெற்ற சிறந்த இணைப்பாட்டத்தில் இவரும் தரங்க 286 ஓட்டங்களை பெற்றனர் (சனத் 152 ஓட்டம்)
 12. ஒரு நாள் போட்டிகளில் ஒரு ஓவரில் அதிக ஓட்டம்(30 ஓட்டங்கள் 2 தடவை) பெற்றவர் என்ற சாதனையை நிலை நாட்டியிருந்தார். பின்னர் இது முறையடிக்கப்பட்டது.
 13. வேகமாக சதம் பெற்றவர் என்ற சாதனையை நிலை நாட்டியிருந்தார் பின்னர் இது முறையடிக்கப்பட்டது.(100 ஓட்டங்கள் 48 பந்துகளில்)
 14. ஒரு போட்டியில் அதிக ஆறு ஓட்டங்களை பெற்றவர் என்ற சாதனையை நிலை நாட்டியிருந்தார் பின்னர் இது முறையடிக்கப்பட்டது.   (11 ஆறு ஓட்டங்கள்)
 15. தனிநபராக அதிக ஆறு ஓட்டம் பெற்ற இரண்டாவது வீரர்(270 ஆறு ஓட்டங்கள்)
 16. டெஸ்ட் போடிகளில் இரண்டாவது விக்கட்டுக்காக மற்றும் அணைத்து விகட்டுக்குமான அதிக இணைப்பாட்டத்தை புரிந்த ஜோடி என்ற சாதனையை கொண்டிருந்தார். பின்னர் இதுவும் முறையடிக்கப்பட்டது(576 ஓட்ட இணைப்பாடம் சனத் 340 தனியாக பெற்றது)  
 17. டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரு ஓவரில் அதிக படியான நான்கு ஓட்டங்களை பெற்றவர் என்ற சாதனை(6 நான்கு) 

டெஸ்ட் 952/6dSanath Jayasuriya340 1997
ஒரு நாள் 443/9Sanath Jayasuriya157 2006
இருபதுக்கு இருபது260/6Sanath Jayasuriya88 2007
 இதில் முதலாவது போட்டி வகையை இரண்டாவது அணி பெற்ற ஓட்டங்களையும் மூன்றாவது அதிக ஓட்டம் பெற்ற வீரர் பெயரையும் நான்காவது பெற்ற ஓட்டங்களையும் ஐந்தாவது பெறப்பட ஆண்டையும் குறிப்பிடுகின்றது.இது இலங்கை அணியின் உச்சமான சாதனை அதாவது சகல வகையான போட்டிகளிலும் ஒரு அணி பெற்ற அதிகூடிய ஓட்டம் என்ற சாதனை அத்தனை போட்டிகளும் சனத் அதிக ஓட்டங்களை பெற்றுள்ள்ளமை அவரது பங்களிப்பை எடுத்துக்காட்டுகின்றது  .
 
இப்படி பல சாதனைகளை நிலைநாட்டியவர் இருபதுக்கு இருபது  போட்டிகளில் பெரிதாக சாதிக்க முடியவில்லை(வயது மற்றும் அரசியல் சூழ்நிலைகள்) .இவ்வாறு இலங்கை கிரிக்கெட் இல் ஒரு முக்கிய சாதனை வீரனாக செயற்ப்பட்ட சனத் இறுதிக்காலத்தில் பல தடவைகள் ஒதுக்கப்பட்டு வந்தமை ரசிகர்கள் இடையே ஒரு அதிருப்தியை ஏற்ப்படுத்தியது என்றால் அது மறுக்க முடியாத உண்மை.ஓய்வை அறிவித்து மீண்டும் விளையாடியமை இதன் சான்று எனலாம். இறுதி வரை தன் திறமையும் தன்னையும் நம்பி விளையாடுவதற்க்கு ஆவலுடன் ஒவ்வொரு தொடரையும் எதிர்பார்த்து  காத்திருப்பது பிற்க்காலங்களில் இவரது வழமையாகியது.எனினும் உலகக்கோப்பைக்கான அணியில் இவரது பெயர் இடப்பட்டு pinnar இறுதியில் நீக்கப்பட்டது ஒரு அவமானப்படுத்தும் செயலாகவே நான் கருதுகிறேன். இது இறுதில் பல ரசிகர்களை இலங்கை கிரிக்கெட்டுக்கு எதிராக பேசவும் வைத்தது. அந்தளவிற்க்கு அவர் ரசிகர்களை கவர்ந்தார் என்றால் அது மறுக்க முடியாத உண்மை.எனினும் தொடர்ந்து வாய்ப்புக்கள் வராத காரணத்தால் இறுதியாக 2011 இலங்கை இங்கிலாந்து தொடரின் ஒரு போட்டியுடன் சகல சர்வதேச போட்டிகளும் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.எனினும் அவர் என்றுமே அவர் காலத்தால் அழியாத சாதனைகளை மேற்க்கொண்டு ரசிகர்கள் இடையிலும் கிரிக்கெட் உலகத்திலும் ஒரு நிரந்தர இடத்தை பெற்றுகொண்டுவிட்டார். என்றுமே காலத்தால் அழியாத சாதனைகளின் சொந்தக்காரரன் சனத் ஜெயசூர்யா.
குறிப்பு 
1) ஒரு பெரிய புகழ் பூத்த மனிதரின் சாதனைகளை பட்டியலிடுவது  என்பது கடினமான விடயம் எனவே என்னால் முடிந்தவற்றை  நான் குறிப்பிட்டுள்ளேன். 


2)இந்த பதிவு எழுத ஆரம்பித்த முதல் ஏற்ப்பட்ட மின் தடை காரணமாக தவறுகள் ஏற்ப்பட்டிருந்தால் மன்னித்துவிடவும் .