Jun 26, 2011

சமூகத்தின் பார்வையில் ஆண் பெண் உறவு

வணக்கம் நண்பர்களே மீண்டும் ஒரு சந்திப்பு உங்களுடன்.இந்த முறை நான் உங்களுடன் நம் சமூகத்தில் இன்று ஏற்பட்டுள்ள ஒரு புதிய பார்வை பற்றி.சரி நான் நேரடியாகவே விடயத்துக்குள் வருகிறேன்.இன்று எம் சமூகம் ஏனோ ஒரு ஆண் ஒரு பெண் ஒன்றாக அருகருகில் நின்று கதைத்து பேசினால் அதை ஒரு தவறான கண் கொண்டு பார்க்கின்றது ??புரியவில்லை எனக்கு சரி ஒரு காலத்தில் பெண்கள் வீடுகளுக்குள் அடைபட்டு கிடந்த காலம் இருந்தது அன்றைய காலத்தில் இப்படியான ஒரு பார்வை பார்த்தால் அது சரியானதாக இருக்கும் ஆனால் இன்று பெண்கள் இல்லாத துறை என்று ஒரு துறையை நாம் தேடிக்கண்டு பிடித்து விட முடியாது அந்தளவுக்கு பெண்கள் இன்று உலகின் சகல மூலைகளிலும் முன்னேறிவிட்டனர் ஆனால் இன்றும் எம் சமூகம் ஒரு ஆண் பெண் உறவை தவறாக தான் பார்க்கிறது இது மாற்ற பட வேண்டிய ஓன்று . நான் சிலவற்றை இல்லை என்று மறுக்கவில்லை இன்று ஆண் பெண் உறவுகள் பல தவறான வழிகளே தான் செல்கின்றது ஆனாலும் நம் சமூகமும் அவ்வாறான சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எல்லோர் உறவையும் ஒரு தவறான கண் கொண்டு தான் பார்க்கிறது இது வருந்ததக்க ஒரு விடயம்.இந்த தவறான கணிப்பு சில வேளைகளில் தேவையற்ற மன கசப்புகளை ஏற்ப்படுத்திவிடுகிறது. ஆண் பெண் உறவு என்றால் எல்லோரும் காதலர்களாகவே பார்க்கின்றனர் ஏன் ஒரு ஆண் பெண் சிறந்த நண்பர்களாக ,அண்ணன் தங்கையாக ஏன் பழக முடியாது??? ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் விட்டால் அது முழுக்க விஷமாகிறது அதைப்போலவே ஒரு சில பேர் விடுகிற தவறுகள் அனைவரயும் பாதிக்கிறது இது மாற்றப்படவேண்டும்.பெரியவர்கள்அவர்கள் வளர்ந்த கால பகுதிகள் அவர்கள் பெற்ற அனுபவங்களை கொண்டு தான் இவற்றை பார்கின்றனர் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது ஆனால் சில வேளைகளில் அவர்கள் தவறு விடுகின்றனர் அலசி ஆராயாமல் ஒரு பெண் ஆண் பழக்கத்தை விமர்சித்து விடுவார்கள் ஆனால் அங்கு அவர்களுக்குள் இடையில் இருப்பவற்றை ஆராய்ந்து தான் கூறுகின்றனர்களா? என்றால் இல்லை.இது மிக வருந்த தக்க ஒரு செயல் ஒரு விடயம் சமூகத்தில அடிபட ஆரம்பித்தால் அது எப்படி பரவுகின்றது என்றே தெரியாமல் பரவி விடும். எனவே இவ்வாறான ஒரு செய்தி பரப்பப்படும் போது அது சம்பந்தப்பட்டவர்களை எவ்வளவு பாதிக்கும் என்பதை யோசித்தும் கதைக்க வேண்டும்.எனவே ஒரு ஆண் பெண் உறவை எபோதும் வடிவாக அறிந்த பின்னரே அதைப்பற்றி விமர்சிக்க வேண்டும்.சரி நான் இவ்வளவற்றையும் கூறி விட்டு அதற்க்கு உதாரணம் கூறாமல் விடுவது நல்லதல்ல எனக்கு நிகழ்ந்த ஒரு உண்மை அனுபவத்தையே கூறுகிறேன். என் ஊரிலே(சுதுமலை மானிப்பாய் அருகில் தான்) நான் கடந்த மாதம் எங்கள் ஊர் கோயிலுக்கு சென்றேன் ஒரு பூசைக்காக சென்ற போது என்னுடன் என் தங்கையும் வந்தாள்.பூசை இடைவெளியில் நாங்கள் வெளியே சென்று கோயில் ஒரு வாசல் கதவடியில் தள்ளித்தள்ளி தான் நின்று எதோ கதைத்தோம் அதற்க்கு அந்த கோயிலில் சேவை செய்கின்ற ஒருவர் சொல்ல முடியாத வார்த்தைகளை கொண்டு விமர்சித்தார்.இது சரியான ஒன்றா?? ஏன் இந்த சமூக மாற்றம் இவ்வளவுக்கும் அவர் எங்கள் ஊர் வசிப்பவர் இதில் இருந்து இன்னொன்றும் வெளிபடையாக தெரிகிறது அதாவது இன்று சமூகத்தில் உள்ளவர்கள் இடையே ஒரு நெருக்கம் இல்லை என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை..இப்படி பல சமபவங்கள் நடைபெறுகின்றன இவற்றை நாம் முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.. ஒரு சிலர் விடும் பிழைகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கின்றது.நான் மறுக்கவில்லை ஆண் பெண் உறவுகள் இன்று தவறான வழியில் செல்கின்றது என்பதை ஆனாலும் சில உண்மையான சில உறவுகள் இதனால் பாதிக்கப்படுவது தவர்க்கப்பட வேண்டும்.

0 comments: