Jun 27, 2011

யாழ் மாணவிகளின் தெருச்சண்டை

வணக்கம் நண்பர்களே! ஒவ்வொரு முறையும் நான் ஏதாவது ஒரு விடயம் பற்றி தான் கதைத்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால் இந்த முறை எங்கள் சமூகத்தில்அண்மையில்நடந்தேறியஒருசிரிப்பிற்க்குரியதும்,வெட்கப்படுவதுக்குரியதுமான ஒரு சம்பவம் பற்றி பகர்கின்றேன். யாழ்ப்பாணம் என்றால் எல்லோரும் உடனே சொல்வது எங்கள் நல்லூர் முருகன் கோவிலைத்தான் அந்தளவிற்கு பெயர் போன ஆலயம் அது.இன்று தென் பகுதி மக்கள் கூட அதிகம் வருகின்ற பிரதேசம் நல்லூர். அந்தளவிற்கு புகழ் பெற்ற ஆலய சூழலில் நடைபெற்ற ஒரு சம்பவம் பற்றி கூறுகிறேன். நீங்களே சொல்லுங்கள்; எங்கள் நிலைமை எங்கே செல்கிறதென்று.கடந்த கிழமை ஒரு மதியம் கழிந்து மாலைப்பொழுது ஆரம்பமாகும் நேரம் பாடசாலை விட்டு பள்ளி மாணவர்கள் வீடு சென்று கொண்டு இருந்தனர் .அந்த வேளை நல்லூர் வீதியால் சென்று கொண்டிருந்த இரு பாடசாலை மாணவிகள் இருந்தாற்போல் வீதியிலே இறங்கி திடீர் என்று அடிபட தொடங்கினர். பின்னர் ஒருவர் தலையை மாறிமாறி பிடித்தபடி ஆலய சூழலில் உருண்டனர்.இதை பார்த்து அந்த வழியால்  சென்ற பெரியவர்கள்,இளவயது ஆண்கள்,பெண்கள் கூடிவிட்டனர். ஆனால் அவர்கள் இவ்வளவற்றையும் கண்டுகொள்ளாமல் தங்கள் சண்டையை தொடர்ந்தனர். இதனை பார்த்த சில பெரியவர்கள் சென்று இருவரையும் விலக்கிப்பிடித்தனர் பிறகு காரணத்தை கேட்ட பொழுது வெட்க்கபடவேண்டிய நிலை அவர்கள் சொன்ன  காரணம் "இருவரும் ஒரு ஆணை காதலித்து வந்தார்கள் என்றும்ம் இதில் ஒருவர் மற்றைய பெண் பற்றி அந்த ஆணிடம் தன்னை பற்றி தவறாக  சொல்லிவிட்டார் என்றும் சொல்லி இருக்கின்றாள் "  என்று கூறி மீண்டும் சண்டையிட பெரியவர்கள் போலீசாரிடம்  தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்போவதாக சொல்ல அவர்கள் பயத்தின் நிமிர்த்தம் சென்று விட்டனர்.இது வெறும் ஒரு நகைச்சுவையான ஒரு செய்தி இல்லை. நாங்கள் வெட்க்கப்பட வேண்டிய ஒரு செய்தி எங்கே போகின்றது நம் நிலை? பாடசாலை செல்லும் இரு மாணவிகள் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டது  மிகவும் கவலைக்குரிய ஒரு விடயம் பெண்கள் இவ்வாறு தெருக்களில் சண்டை இடுவது என்பது நாங்கள் எல்லோரும் சிந்திக்கவேண்டிய ஒரு விடயம். நம் சமூகத்தின் நற் பெயர்,மதிப்பு,புகழ் எல்லாமே எங்கள் கைகளில் தான் உள்ளது. காலம்காலமாக நம் முன்னோர் கட்டிக்காத்தவற்றை நாங்கள் இழக்கலாமா?? சற்று சிந்தித்து பாருங்கள்.எங்கள் பண்பாடு,ஒழுக்கம் என்பவற்றை பாதுகாக்க வேண்டியது எம் கடமை. இதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயற்படவேண்டும்.எனவே நண்பர்களே! நாம் இதை உணர்ந்து செயற்ப்படவேண்டும் என்பது என் வேண்டுகோள். 

0 comments: