Jun 28, 2011

ஈழத் தமிழருக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருது..


ஈழத் தமிழருக்கு உயரிய விருதான செவாலியர் விருது., பிரான்ஸ் அரசு கௌரவிப்பு…..

பிரெஞ்சு அரச சேவையில் நீண்ட காலம் பணியாற்றிய இலங்கை பிரஜையை பிரான்ஸ் அரசு நேற்று கௌரவித்துள்ளது

கடந்த 2007 ஆம் ஆண்டு பிரெஞ்சு அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற யாழ் பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த நாகநாதன் வேலுப்பிள்ளை இலங்கைக்கான பிரேஞ்சு தூதுவர் திருமதி கிருஸ்டியன் ரொபின்ஸனினால் நேற்று திங்கட்கிழமை செவாலியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

ஆங்கிலம் தமிழ் பிரெஞ்சு சிங்களம் கிந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்ற இவர் பல தசாப்தங்களாக இலங்கை மற்றும் பிரெஞ்சு அரச சேவையில் கடமையாற்றியுள்ளார்.இவர் சட்டத்தரணியுமாவார்.
திரு. வேலுப்பிள்ளை பருத்தித்துறை ஆத்தியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. வே.நாகநாதன், திருமதி. ஈஸ்வரி நாகநாதன் அவர்களின் புதல்வர் ஆவார்.

காலஞ்சென்ற திரு. நாகநாதன் பருத்தித்துறை நகர சபையின் துணை முதல்வராக இருந்தவர் என்பதும், நாகர்கோவிலில் பாடசாலை ஒன்றை உருவாக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியான பேராசிரியர் ஞானக்குமரனின் சகோதரரும் ஆவார்.

செவாலியர் விருது திறமை அடிப்படையில் பிரான்ஸ் நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.





நன்றிகள் Nirujan Selvanayagam

Jun 27, 2011

யாழ் மாணவிகளின் தெருச்சண்டை

வணக்கம் நண்பர்களே! ஒவ்வொரு முறையும் நான் ஏதாவது ஒரு விடயம் பற்றி தான் கதைத்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால் இந்த முறை எங்கள் சமூகத்தில்அண்மையில்நடந்தேறியஒருசிரிப்பிற்க்குரியதும்,வெட்கப்படுவதுக்குரியதுமான ஒரு சம்பவம் பற்றி பகர்கின்றேன். யாழ்ப்பாணம் என்றால் எல்லோரும் உடனே சொல்வது எங்கள் நல்லூர் முருகன் கோவிலைத்தான் அந்தளவிற்கு பெயர் போன ஆலயம் அது.இன்று தென் பகுதி மக்கள் கூட அதிகம் வருகின்ற பிரதேசம் நல்லூர். அந்தளவிற்கு புகழ் பெற்ற ஆலய சூழலில் நடைபெற்ற ஒரு சம்பவம் பற்றி கூறுகிறேன். நீங்களே சொல்லுங்கள்; எங்கள் நிலைமை எங்கே செல்கிறதென்று.கடந்த கிழமை ஒரு மதியம் கழிந்து மாலைப்பொழுது ஆரம்பமாகும் நேரம் பாடசாலை விட்டு பள்ளி மாணவர்கள் வீடு சென்று கொண்டு இருந்தனர் .அந்த வேளை நல்லூர் வீதியால் சென்று கொண்டிருந்த இரு பாடசாலை மாணவிகள் இருந்தாற்போல் வீதியிலே இறங்கி திடீர் என்று அடிபட தொடங்கினர். பின்னர் ஒருவர் தலையை மாறிமாறி பிடித்தபடி ஆலய சூழலில் உருண்டனர்.இதை பார்த்து அந்த வழியால்  சென்ற பெரியவர்கள்,இளவயது ஆண்கள்,பெண்கள் கூடிவிட்டனர். ஆனால் அவர்கள் இவ்வளவற்றையும் கண்டுகொள்ளாமல் தங்கள் சண்டையை தொடர்ந்தனர். இதனை பார்த்த சில பெரியவர்கள் சென்று இருவரையும் விலக்கிப்பிடித்தனர் பிறகு காரணத்தை கேட்ட பொழுது வெட்க்கபடவேண்டிய நிலை அவர்கள் சொன்ன  காரணம் "இருவரும் ஒரு ஆணை காதலித்து வந்தார்கள் என்றும்ம் இதில் ஒருவர் மற்றைய பெண் பற்றி அந்த ஆணிடம் தன்னை பற்றி தவறாக  சொல்லிவிட்டார் என்றும் சொல்லி இருக்கின்றாள் "  என்று கூறி மீண்டும் சண்டையிட பெரியவர்கள் போலீசாரிடம்  தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்போவதாக சொல்ல அவர்கள் பயத்தின் நிமிர்த்தம் சென்று விட்டனர்.இது வெறும் ஒரு நகைச்சுவையான ஒரு செய்தி இல்லை. நாங்கள் வெட்க்கப்பட வேண்டிய ஒரு செய்தி எங்கே போகின்றது நம் நிலை? பாடசாலை செல்லும் இரு மாணவிகள் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டது  மிகவும் கவலைக்குரிய ஒரு விடயம் பெண்கள் இவ்வாறு தெருக்களில் சண்டை இடுவது என்பது நாங்கள் எல்லோரும் சிந்திக்கவேண்டிய ஒரு விடயம். நம் சமூகத்தின் நற் பெயர்,மதிப்பு,புகழ் எல்லாமே எங்கள் கைகளில் தான் உள்ளது. காலம்காலமாக நம் முன்னோர் கட்டிக்காத்தவற்றை நாங்கள் இழக்கலாமா?? சற்று சிந்தித்து பாருங்கள்.எங்கள் பண்பாடு,ஒழுக்கம் என்பவற்றை பாதுகாக்க வேண்டியது எம் கடமை. இதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயற்படவேண்டும்.எனவே நண்பர்களே! நாம் இதை உணர்ந்து செயற்ப்படவேண்டும் என்பது என் வேண்டுகோள். 

Jun 26, 2011

சமூகத்தின் பார்வையில் ஆண் பெண் உறவு

வணக்கம் நண்பர்களே மீண்டும் ஒரு சந்திப்பு உங்களுடன்.இந்த முறை நான் உங்களுடன் நம் சமூகத்தில் இன்று ஏற்பட்டுள்ள ஒரு புதிய பார்வை பற்றி.சரி நான் நேரடியாகவே விடயத்துக்குள் வருகிறேன்.இன்று எம் சமூகம் ஏனோ ஒரு ஆண் ஒரு பெண் ஒன்றாக அருகருகில் நின்று கதைத்து பேசினால் அதை ஒரு தவறான கண் கொண்டு பார்க்கின்றது ??புரியவில்லை எனக்கு சரி ஒரு காலத்தில் பெண்கள் வீடுகளுக்குள் அடைபட்டு கிடந்த காலம் இருந்தது அன்றைய காலத்தில் இப்படியான ஒரு பார்வை பார்த்தால் அது சரியானதாக இருக்கும் ஆனால் இன்று பெண்கள் இல்லாத துறை என்று ஒரு துறையை நாம் தேடிக்கண்டு பிடித்து விட முடியாது அந்தளவுக்கு பெண்கள் இன்று உலகின் சகல மூலைகளிலும் முன்னேறிவிட்டனர் ஆனால் இன்றும் எம் சமூகம் ஒரு ஆண் பெண் உறவை தவறாக தான் பார்க்கிறது இது மாற்ற பட வேண்டிய ஓன்று . நான் சிலவற்றை இல்லை என்று மறுக்கவில்லை இன்று ஆண் பெண் உறவுகள் பல தவறான வழிகளே தான் செல்கின்றது ஆனாலும் நம் சமூகமும் அவ்வாறான சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எல்லோர் உறவையும் ஒரு தவறான கண் கொண்டு தான் பார்க்கிறது இது வருந்ததக்க ஒரு விடயம்.இந்த தவறான கணிப்பு சில வேளைகளில் தேவையற்ற மன கசப்புகளை ஏற்ப்படுத்திவிடுகிறது. ஆண் பெண் உறவு என்றால் எல்லோரும் காதலர்களாகவே பார்க்கின்றனர் ஏன் ஒரு ஆண் பெண் சிறந்த நண்பர்களாக ,அண்ணன் தங்கையாக ஏன் பழக முடியாது??? ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் விட்டால் அது முழுக்க விஷமாகிறது அதைப்போலவே ஒரு சில பேர் விடுகிற தவறுகள் அனைவரயும் பாதிக்கிறது இது மாற்றப்படவேண்டும்.பெரியவர்கள்அவர்கள் வளர்ந்த கால பகுதிகள் அவர்கள் பெற்ற அனுபவங்களை கொண்டு தான் இவற்றை பார்கின்றனர் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது ஆனால் சில வேளைகளில் அவர்கள் தவறு விடுகின்றனர் அலசி ஆராயாமல் ஒரு பெண் ஆண் பழக்கத்தை விமர்சித்து விடுவார்கள் ஆனால் அங்கு அவர்களுக்குள் இடையில் இருப்பவற்றை ஆராய்ந்து தான் கூறுகின்றனர்களா? என்றால் இல்லை.இது மிக வருந்த தக்க ஒரு செயல் ஒரு விடயம் சமூகத்தில அடிபட ஆரம்பித்தால் அது எப்படி பரவுகின்றது என்றே தெரியாமல் பரவி விடும். எனவே இவ்வாறான ஒரு செய்தி பரப்பப்படும் போது அது சம்பந்தப்பட்டவர்களை எவ்வளவு பாதிக்கும் என்பதை யோசித்தும் கதைக்க வேண்டும்.எனவே ஒரு ஆண் பெண் உறவை எபோதும் வடிவாக அறிந்த பின்னரே அதைப்பற்றி விமர்சிக்க வேண்டும்.சரி நான் இவ்வளவற்றையும் கூறி விட்டு அதற்க்கு உதாரணம் கூறாமல் விடுவது நல்லதல்ல எனக்கு நிகழ்ந்த ஒரு உண்மை அனுபவத்தையே கூறுகிறேன். என் ஊரிலே(சுதுமலை மானிப்பாய் அருகில் தான்) நான் கடந்த மாதம் எங்கள் ஊர் கோயிலுக்கு சென்றேன் ஒரு பூசைக்காக சென்ற போது என்னுடன் என் தங்கையும் வந்தாள்.பூசை இடைவெளியில் நாங்கள் வெளியே சென்று கோயில் ஒரு வாசல் கதவடியில் தள்ளித்தள்ளி தான் நின்று எதோ கதைத்தோம் அதற்க்கு அந்த கோயிலில் சேவை செய்கின்ற ஒருவர் சொல்ல முடியாத வார்த்தைகளை கொண்டு விமர்சித்தார்.இது சரியான ஒன்றா?? ஏன் இந்த சமூக மாற்றம் இவ்வளவுக்கும் அவர் எங்கள் ஊர் வசிப்பவர் இதில் இருந்து இன்னொன்றும் வெளிபடையாக தெரிகிறது அதாவது இன்று சமூகத்தில் உள்ளவர்கள் இடையே ஒரு நெருக்கம் இல்லை என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை..இப்படி பல சமபவங்கள் நடைபெறுகின்றன இவற்றை நாம் முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.. ஒரு சிலர் விடும் பிழைகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கின்றது.நான் மறுக்கவில்லை ஆண் பெண் உறவுகள் இன்று தவறான வழியில் செல்கின்றது என்பதை ஆனாலும் சில உண்மையான சில உறவுகள் இதனால் பாதிக்கப்படுவது தவர்க்கப்பட வேண்டும்.

Jun 25, 2011

பாரதி கண்ட புதுமைப்பெண் இவளா???யாழில் பெண்களின் சிரழிவுகள்



வணக்கம் நண்பர்களே மீண்டும் ஒரு பதிவுடன் உங்களை சந்திப்பதில் சந்தோசம் தான்.சரி இந்த பதிவு நம்ம சமூக பிரச்சினை சம்பந்தப்பட்டது தான் ஒன்றும் பெருசா இல்ல நம்ம சமூகத்தில் பெண்கள் மேற்க்கொள்கிற கலாச்சார சீரழிவுகள் பற்றி தான் சொல்லப்போறேன். நீங்க(பெண்கள்) கேக்கிறது புரியுது என்ன ஆண்கள் கலாச்சார சிரழிவுகளை செய்யவில்லையா  என்று ஆனா அது எப்படி நியாயம் எல்லாத்திலையும் பெண்களை தான் இலரும் முன்னுக்கு வைத்து கதைப்பாங்க நான் மட்டும் எப்படி மாத்திச்செய்யிறது??? பிறகு நீங்க(ஆண்கள்) எல்லாம் என்ன சொல்லுவீங்க ?? அதான் நான் பேசாம முதலாவதாக பெண்கள் பற்றியே சொல்லிவிடுகிறேன்(சகோதரிகளே கோபம் வேண்டாம் என் மேல ) சரி நான் தொடங்கிறேன் சொல்ல. நம்ம தமிழ் சமூகம் என்றுமே பெண்களை தான் அதிக மாரியாதை கொடுத்து வந்துள்ளது ஒரு பெண்ணுக்கு ஒரு சிறு அவமானம் என்றாலும் பொங்கி எழுந்தவர்கள் நம் சமூகதவர் அந்தளவுக்கு நம் சமூகம் பெண்களை மதித்து மதிகின்றது ஆனால் இன்று நம் தமிழ் சமூகத்தில் ஒரு சிறு கலாச்சார மாற்றம் ஏற்பட்டு வருவதை நாங்கள் வெளிப்படையாவே காண்கின்றோம் அதை இல்லை என்று மறுக்கவும் இயலாது ஏன் என்றால் நம் பத்திரிகைகள்,தொலைக்காட்சிச்செய்திகள் போன்றவற்றில் நாங்கள் பார்க்கிறோம்.ஏன் இந்த ஒரு மாற்றம் நம் சமூகத்தில் ஒரு கேள்வி எழுகின்றது என்னிடத்தில்(உங்களுக்கும் வரும் வரவில்லை என்றால்  நான் என்ன செய்வது???) என்னை பொறுத்த வரையில் இந்த மாற்றத்துக்கு காரணம் என்று நான் கருதுவது தொலைபேசி,இணையம்,இந்திய தமிழ் திரைப்படங்கள்(நான் எல்லோரையும் சொல்லவில்லை சமூகத்தின் ஒரு சிலரை மாத்திரமே குறிப்பிடுகிறேன்). ஆரம்ப காலங்களில் இந்த தொலைபேசி,இணையம் என்பது செல்வந்த பொருளாகவே பார்க்கப்பட்டு வந்தது காரணம் அவை அதிகளவு பெறுமதியான பொருட்களாக பார்க்கப்பட்டு வந்தன ஆனால் இன்று அப்படியான ஒரு நிலை இன்று இல்லை தொலைபேசி மற்றும் இணைய வசதிகள் மலிந்து போய் கிடக்கின்றன.முன்னர் எல்லாம் ஒரு லைபேசி மற்றும் இணைய வசதியை பெற வேண்டும் என்றல் எவ்வளவோ சிரமங்களை எதிர்நோக்கினோம் ஆனால் இன்று எங்கள் வீட்டுகளுக்கே வந்து சேவைகளை வழங்குகிறார்கள் அதை விட தொலைபேசி முன்னர் சில நிறுவனங்களின் உற்பத்தியே சந்தையில் கிடைத்து இதனால் அவை அதிகளவு பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருந்தது ஆனால் இன்று இந்திய மற்றும் சீனா தொலைபேசிகள் வருகை எல்லோர் கைகளிலும் தொலைபேசியை செல்லப்பிள்ளை ஆக்கிவிட்டது.இதனால் பெண்கள் தொலைபேசிகள் பாவிப்பது இணையம் பாவிப்பது அதிகமாக காணப்படுகிறது(அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு)  இதன் காரணமாக பல சீரழிவுகள் நம் சமூகத்தில் ஏற்படுகிறது சொல்ல கூட வெட்க்கமான விடயங்கள் நாடி பெறுகின்றன. சிலவற்றை உதாரணத்துக்கு சொன்னால் இளவயது காதல்கள், பல ஆண்களுடன் ஒரு பெண் நட்பு கொள்வது(நட்பு என்ற போர்வையில் கூத்து அடிப்பது), ஆபாச படங்கள் பார்ப்பது இதைவிட இணையத்திலே Facebook அரடை அடிப்பது (தெரியாத ஆண்களுடன் அரட்டை அடிப்பதை தான் சொல்கிறேன்) Videochat (முகம் பார்த்து தான் கதைக்கணும் ஆனால் இங்கே அது இல்லை),இன்னயங்கள் மூலம் வெளிநாட்டு ஆண் நண்பர்கள் பழக்கம் இப்படி சொல்லக்கூடியவற்றை சொல்லிவிட்டேன் இதை விட சொல்ல முடியாத பல அரங்கேறுகின்றது(சொல்லியா தெரியனும்).சரி இவ்வாறான சம்பவங்களுக்கு சில உண்மைச் சம்பவங்களை கூறி முடிக்கலாம் என்று நினைக்கின்றேன்.முதலாவதாக  அண்மையில் குடாநாட்டு பத்திரிகைகளில் பரவலாக வெளியான இரண்டு  செய்திகள் 1) இரண்டு பெண்பிளைகள்  குளிர்பான  சாலைகுச்சென்று குளிர்பானம் அருந்தியவாறு தொலைபேசியையே பலமணி நேரங்களாக  பார்த்த வண்ணம் இருந்தனர் எனவும்பின் memory card ஐ கழற்றி தமது கைப்பைக்குள் வைத்த போது அது தவறி விழ அதை எடுத்து பார்த்த கடை   பணியாளர் அதில் பல ஆபாச படங்கள் சேகரித்திருப்பதை பார்த்து  பத்திரிகைக்கு தெரிவித்த தகவலும்அடுத்து ஒரு பெண் பல ஆண் நண்பர்களுடன் குளிர்பான சாலைக்கு சென்று  மகிழ்ச்சியாக இருந்தவேளை அப்பெண்ணிற்கு வந்த தொலைபேசி அழைப்பில் 'அம்மா இப்பொழுதுதான் கணித பாடம்  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது 'என்று அவர் கூறியதாகவும் அங்கு இதை அவதானித்த ஒருவர் பத்திரிகைக்கு குறிப்பிட்ட தகவலையும் எடுத்துக்காட்டாக குறிப்பிடமுடியும்.இதைவைத்து பார்க்கும் போது ஆண்களை விட பெண்களே அதிக சீர்கேட்டிற்கு ஆளாகின்றமை வருந்ததக்கது எனலாம் .மேலும் மேல்நாட்டு கலாசார மோகம் யாழின் சீரழிவில் அப்பட்டமாக தென்படுகிறது  என்பதற்கு சுப்பிரமணியம் பூங்காவில் காதல் எனும் பெயரில் இளவயதினர்  செய்யும் அடாவடித்  தனங்களையும் :மற்றும் பிரபல பாடசாலை மாணவி  ஒருவர்  பாடசாலைக்கு செல்வதககூறி சீருடையுடன் சென்று பின் யாருக்கும்  தெரியாமல் வேறு உடை அணிந்து  தன் ஆண் நண்பனுடன்சுப்பிரமணியம்  பூங்காவில்தகாத செயலில் ஈடுபட்டமையை குறிப்பிட்டு கூறலாம் .
  • பெண்களின் சீரழிவுகு முக்கிய எடுத்துக்காட்டு யாழ் பொது  வைத்தியசாலையில் பிரபல பாடசாலை பெண் மாணவிகளுக்கு  மட்டுமென ஒதுக்கபட்டுள்ள முறையற்ற கற்பதை தவிர்க்கும் பிரிவை  சுட்டிக்காட்டலாம் ..
  •  அண்மையில் வெளியான மிகவும் பரபரப்பை ஏற்படுதிய செய்தி - ஒரு ௧௯ வயது  பாடசாலை மாணவி தன் முறையற்ற கற்பதை கலைப்பதற்காக  தன் பல்கலைகழக  மாணவரான ஆண்  நண்பருடன்  சேர்ந்து  கடத்தல்  நாடகமாடி போலீசாரை திசைதிருப்ப நினைத்து அகப்பட்டு கொண்ட  சம்பவத்தை குறிப்பிடலாம்

குடும்ப விளக்காக இருக்க வேண்டிய பெண்கள்(நம்ம Super Star ஏ சொல்லி இருக்கார் இல்ல சிவாஜி படத்தில்"யாழ்ப்பாண பெண்கள் தான் குடும்ப பெண்கள் என்று)  இவ்வாறு தெரு விளக்காக  மாற்றமடைந்ததமை  மனவருத்ததிர்க்குரியதாயினும்  பெண்களின்  இந்த  மாற்றத்திற்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும் ஆண்களே மிகமுக்கிய  காரணியாக கருதபடுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மையே!

'பாரதி கண்ட புதுமைப்பெண் இவளா' ? பாரதியே நாணி நிற்கும் நிலை ; பெண்களினால் சீரழிவுகள் 

Jun 24, 2011

தீராத பிரச்னை நம் யாழ்ப்பாண மின்சாரப்பிரச்னை......

யாழ்ப்பாணம் என்றுமே மீள முடியாமல் சிக்கி தவிக்கும் ஒரு பிரச்சனை சீரற்ற மின்சார விநயோகம்.என்னவோ தெரியவில்லை நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளின்(1992) போது துண்டிக்கப்பட்ட சீரான மின் விநயோகம் இன்று வரை ஒழுங்காக எமக்கு கிடைக்கவில்லை.ஆரம்ப காலங்களில் லக்க்ஷபானவில் இருந்து நாம் மின்சாரம் பெற்றோம் அப்போதெல்லாம் வறட்சி காலங்களில் மாத்திரம் மின்சார தடைகளை அனுபவித்தோம் ஆனால் கடந்த இருபது வருடங்கள்ளாக நாம் இந்த சீரான மின்சாரத்தை பெறுவதில் அடிக்ககடி பிரச்சனைகளை முகம் கொடுக்கிறோம்.சரி யாழ்ப்பாணத்தின் இந்த மின்சார பிரச்சனைக்கான காரணம் என்ன வென்று நான் கருதுவதை உங்களுடன் பகிர்க்கிறேன்.   யாழ்ப்பாணத்துக்கு மின்சாரம் தடைப்பட்ட போது சுன்னாகத்தில் ஒரு துணை மின்சார நிலையம் அதாவது எரிபொருள் கொண்டு மின்பிறப்பாக்கிகளை  இயக்கி அதன் மூலம் மின்சாரத்தை வழங்கினார்கள்.இதன் ஆரம்ப கட்டம் சீரான சேவையை மேற்க்கொண்டது.அதற்க்கு இரண்டு காரணங்கள் ஓன்று அன்றைய நிலைமையில் இங்கு அதிகளவான வீடுகள் மின்சாரத்தை பெறவில்லை மற்றயது அவை புதிய இயந்திரங்களாக இருந்தன எனினும் கால போக்கில் மக்கள் பாவனை அதிகரிக்க அதிகரிக்க பிரச்சனைகளும் சேர்ந்தே அதிகரித்து எனவே மின்சார தேவைகள் அதிகரித்த வேளை அதாவது (1999-2003) அடிக்கடி மின்சார தடை ஏற்ப்பட அப்போது குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இரண்டு நிறுவனங்கள் இணைந்து ஓரளவு நிலைமையை சீர்செய்தன.Agrico  என்ற நிறுவனம் 15MV மின்சாரத்தையும் Cool Air என்ற நிறுவனம் 13MV மின்சாரத்தையும் வழங்கிக்கொண்டு இருந்தன எனினும் அதற்க்கான செலவுகள் அதிகமாக காணப்பட்டதால் அவைகள் 2006 ம் ஆண்டுடன் ஒப்பந்தந்தித்தில் இருந்து நீக்கப்பட்டு.பகுதியளவில் செயற்ப்பட புதிதாக Northern Power என்ற நிறுவனம் சேவையை வழங்க ஆரம்பித்தது ஆரம்பத்தில் 15MV மின்சாரத்தையும் பின்னர் 30MV மின்சார அளவுக்கு அதிகரிக்கப்பட்டு ஓரளவுக்கு சீரான விநயோகம் மேற்கொள்ளபட்டது.ஆனால் இவை ஏற்க்கனவே பாவிக்கபட்டவை என்பதனால் முழுமையான சக்தியை வழங்க முடியவில்லை எனவே ஓட்டுமொத்தம்மாக சேவையை வழங்கின பின்னர் 2009 ம் ஆண்டு Cool Air நிறுவனம் நிறுத்தப்பட்டது பின்னர் மீண்டும் பிரச்சனைகள் தலைதூக்கி பார்த்து சொல்லிச்சென்றன இன்னும் பிரச்சனை தீரவில்லை என்று.எனவோ தெரியவில்லை குறிப்பாக பரீட்சை காலங்களில் சொல்லி வைத்தால் போல மின்சார தடை ஏற்ப்படுவது ஓர் சாபமாக யாழ்ப்பாண மக்களுக்கு இருந்து வருகிறது. 2006 ம் ஆண்டு இணைக்கப்பட்ட Nothern power பின்னர் 2011 முதல் மாதம் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு மீண்டும் Agrico  நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு Nothern Power இரண்டாம் ஒப்ந்தகாரராக கொண்டு யாழ்ப்பாணத்துக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது இபோது மீண்டும் ஒரு ஒபந்த மாற்றத்துக்கான பேச்சுக்கள் இடம் பெற்று வருவதாக ஒரு செய்தி எது எப்படியோ எங்களுக்கான மின்சாரம் ஒழுங்க்காக கிடைத்தால் சரி... இவ்வளவும் சொல்லியாச்சு இதையும் சொல்லிடு போறேன் இப்பொழுது மீண்டும் மின்சார தடை  யாழ்ப்பாணத்தில் அதுக்கும் சொல்ல போனால் ஒரு இரண்டு மணத்தியால மின் தடை இரவில் சரி அது தான் போனால் போகட்டும் என்று பார்த்தல் அதிகாலையும் அதே நிலைமை தான் ..எத்தனை பேர் இதனால் பாதிக்க படுகிறார்கள் தெரியுமா??? இதற்க்கு உடனே நம்ம Facebook,twiter.internet,chatting பாவிக்கிறவங்க என்று பதில் வந்தாலும் வரும் அந்தளவுக்கு நாம(நான் எல்லாரையும் சொல்லவில்லை  ஏதோ சொல்லுவாங்களே அதான் தொப்பி பொருந்தினால் எடுத்து பொட்டுக்கோ அதை தான் நானும் சொல்லிறேன் இப்ப)அதுக்கு அடிமையாகிடோம்   இந்த மின்சார தடை இவர்களுக்கு சிறந்த மருந்து தான் நான் மேல சொல்லவில்லை... சரி சரி மறு புறம் இதை விட இன்னும் ஒரு மாதத்தில் உயர் தர பரீட்சை எடுக்க போகும் மாணவர்கள் நிலை என என்பதை சற்று யோசித்து பாருங்கள். ஏதோ நாங்கள் செய்த பாவம் இப்படியான தடைகளை அடிக்கடி சந்திக்கிறோம் ஏதோ பழகிவிட்டது தான் என்றலும் ஒரு சிறு ஆதங்கம் அதான் அதை நான்  உங்களுடன்  பகிர்ந்துவிட்டேன்.. என்று தான் இதற்க்கான தீர்வு கிடைக்குமோ?? காலத்தின் கைகளில் தான் விடைகளை தேடவேண்டும்.... 

Jun 23, 2011

"பசு தோல் போர்த்திய புலி"அமெரிக்கா பாகம் 2

சென்ற பதிவில் குறிபிட்டு இருந்தேன் அமெரிக்கா கள்ள நாடகம் ஆடுகிறது என்று வெறும் வார்த்தைகளில் சொன்னால் போதுமா??உதாரணம் எங்கே என்று நீங்கள் கேட்டு விடக்கூடாது பாருங்கள் அதனால் நான் உங்களுக்கு சில நான் அறிந்தவற்றை குறிப்பிடுகின்றேன்..சரி சரி முதலாவதாக நாங்கள் ஈராக் மக்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும்  கொண்ட அமெரிக்கா அவர்களுக்காக செய்கின்ற நடவடிக்கைகளை பார்த்து கண் கலங்குகின்றோம்...என்ன அமெரிக்காவா என்று நீங்கள் கேள்வி கேட்பது புரிகிறது ஆனாலும் அதனை இல்லை என்றும் நன் மட்டும் மறுத்தால் போதுமா?? உண்மையில் அமெரிக்கா ஈராக் மீது மேற்க்கொண்ட போர் நடவடிக்கை முழுக்க முழுக்க தன்  நலம் கருதி அமெரிக்க மேற்க்கொண்ட ஒரு நடவடிக்கை.போர் தொடுப்பதற்க்கு அமெரிக்கா கூறிய காரணம் ஈராக் பாரிய பயங்கரமான ஆயுதங்களை தனகத்தே கொண்டுள்ளது என்று அனால் இன்று வரை அதற்கான ஒரு சான்றை கூட அவர்கள் நிரூபித்துக்காட்டவில்லை ஏன் முடியவில்லை ?? அங்கே தானே  அப்படி ஒன்றும் ஒருபோதும் இருந்தது தான் இல்லையே..இந்த ஒரு சிறு காரணத்தை காட்டி தான் போர் தொடங்கினார்கள் ஆனால் உண்மை அவர்கள் சென்றது ஈராக்கில் இருந்த எண்ணெய் வளத்தை சுரண்டவே அது தான் அப்பட்டமான உண்மை சென்றது வெற்றி தான் ஆனால் இதனால் ஈராக் இன்று படும் பாடு சொல்லி தெரிய வேண்டிய ஓன்று இல்லை .. நாள் தோறும் குண்டு வெடிப்புகள்,உயிர் பலி இப்படி பல.... இவ்வாறு தன் நலத்தை  பாதுகாக்க
அமெரிக்கா செய்த ஒரு சிறந்த நாடகம் இது என்பது என் கருத்து.... இன்னும் கருத்துக்கள் தொடரும்  

Jun 22, 2011

"பசு தோல் போர்த்திய புலி"அமெரிக்கா பாகம் 1


அமெரிக்கா உலக நாடுகளின் சமாதானத்தை விரும்பும் ஓர் வல்லரசு.எங்கு மக்களுக்கு எதிராக அநீதிகள் அரங்கேறுகிறதோ அங்கே தானாகவே சென்றது அதில் தலையிட்டு நீதிபதியாக செயற்படுவதில் அமெரிக்காவுக்கு நிகர் அமெரிக்கா என்று சொன்னால் மிகையாகாது.எங்கே ஒரு பிரச்னை வரும் அங்கே எப்போது சென்று விடலாம் என்று காத்திருப்பதும் அவர்கள் தான் ஏனோ அவர்களுக்கு மற்றவர்கள் விடயத்தில் தலையிடுவது என்றல் அப்படி ஒரு அல்லாதிப்பிரியம்.இது நேற்று இன்று வந்த நடைமுறை இல்லை காலம் காலமாக அமெரிக்க அரசியல்வாதிகள் பின்பற்றிவரும் ஒரு சிறந்த கொள்கை ஆட்சி மாற்றங்கள் வந்தாலும் அவர்கள் கொள்கைகைகள் மட்டும்  மாறாது இதனை வளரும் நாடுகள் பின்பற்றி வந்தால் அவர்களும் முன்னேறிவிடலாம் ....ஒ ஒ ஒ  மன்னிக்க வேண்டும் அமெரிக்கா தானே தன்னை தவிர மற்ற நாடுகள் வளர்வதை விரும்புவதில்லை..என்ன அமெரிக்காவா???? ஆமாம்  அமெரிக்கா ஆடும் கள்ள நாடகம் யாருக்கு தான் தெரியாது??? என்றாலும் பரவியில்லை என் பார்வையில் அதை உங்களுடன் அடுத்த பதிவில் பகிர்கிறேன் நண்பர்களே....